இபிஎஸ், கேபி முனுசாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து நீக்கம்.? வெளியான போஸ்டரால் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பும், இரட்டை தலைமை நீடிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம்  தரப்பு கூறி வருகின்றனர். 

இதனிடையே 60க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். ஓ பன்னீர்செல்வத்திற்கு குறைந்த அளவு மட்டுமே ஆதரவு உள்ளது. இதனுடைய ஓ பன்னீர் செல்வத்தை பொருளாளர் பதிவிலிருந்து நீக்குவது அல்லது அடிப்படை உறுப்பினர் பதிலிலிருந்து நீக்குவது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டு வருகின்றனர். மேலும் நமது அம்மா நாளிதழில் இருந்து நிறுவனர் என்ற இடத்தில் ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டது. 

இது எடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓ பன்னீர்செல்வத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ள பேனர்களில் இருந்து புகைப்படத்தை அகற்றுவது, பெயர்களை நீக்குவது என செய்து வருகின்றனர். ஓ பன்னீர்செல்வத்தின் தரப்பினர் எடப்பாடி பலசாமிக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான், பொதுச் செயலாளர் ஓ பன்னீர்செல்வம் தான் என இரு தரப்பினரும் மாறி போஸ்டர் ஒட்டி வருகின்றனர். 

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, கே பி முனுசாமி, ஜெயக்குமார், சிவி சண்முகம் ஆகியோர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு தவறுகளை செய்த காரணத்திற்காக எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி, ஜெயக்குமார், சி.வி சண்முகம் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்கள். கழக தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடரும் வைத்துக் கொள்ளக்கூடாது என அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps jayakumar dismissal poster


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->