தில் இருக்கிறதா? திராணி இருக்கிறதா? தெம்பு இருக்கிறதா? ஸ்டாலினுக்கு சவால் விட்ட எடப்பாடி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தமிழக தேர்தலை ஆணையம் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 9ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி கடந்த 16ஆம் வேட்பு மனு தாக்கல் முடிவரைந்தது. நேற்று வேட்பு மனு பரிசீலனை முடிந்து பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் பேட்டி அளித்தார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தான் உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. இட ஒதுக்கீடு சரியில்லை என்றால் எந்த மாவட்டத்தில் எந்த ஒன்றியத்தில் என்று தெளிவாக கூறவேண்டும். யாரோ எழுதிக் கொடுத்ததை பேசிவரும் ஸ்டாலின் உண்மை என்ன என்பதை தெரிந்து பேச வேண்டும்.

தில் இருக்கிறதா? தெம்பு இருக்கிறதா? திராணி இருக்கிறதா? தேர்தலை நடத்துங்கள் என்று ஸ்டாலின் கூறினார். இப்போ நாங்கள் கேட்கிறோம், தில் இருக்கிறதா? தெம்பு இருக்கிறதா? திராணி இருக்கிறதா? அத்தனையும் இருந்தால் தேர்தலை சந்தியுங்கள் என்று ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சவால் விடுத்துள்ளார்.

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கிறது. மக்களை சந்திக்க ஏன் தயக்கம். தேர்தலை அதிமுக தயாராக இருக்கிறது, மக்களை சந்திக்க தயாராக இருக்கிறது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps challenge to mk stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->