கடலில் கலந்து வீணாகுது.. திமுக அரசால் நொந்து போகும் எடப்பாடி.?! - Seithipunal
Seithipunal


விவசாயிகள் மீது துளிகூட அக்கறை இல்லாமல் மெத்தனப் போக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் நலத்திட்ட பணிகளை துவங்கி வைத்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் வெல்லாலபுரம் செங்காடு பகுதியில் இருக்கும் நீர் உந்து நிலையம் அமைகின்ற பணிகளை முதலில் பார்வையிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். இந்த பேட்டியின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "முதலில் சொத்துவரி உயர்ந்தது அடுத்தது. மின்சார கட்டணம் உயர்ந்தது. இதனை தொடர்ந்து விரைவில் பேருந்து கட்டணம் உயரப் போகிறது. 

தமிழக அரசுக்கு மக்கள் மீது துளிகூட அக்கறை இல்லை. விவசாயிகள் மீது சிறிய அக்கறை கூட இல்லை. கடலில் கலக்கின்ற நீரை சேமிக்கும் முயற்சியில் ஈடுபடாமல் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்கிறது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPs blames full Of Stalin govt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->