அடுத்த அதிரடி.. அதிமுக பணி குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள்... பழனிச்சாமி அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு மீண்டும் ஒதுக்கியதால் கட்சியின் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

இதன் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 106 பேர் கொண்ட தேர்தல் பணி குழுவை அறிவித்தார். இந்த பணிக்குழுவின் தலைவராக முன்னாள் அமைச்சரும் ஈரோடு மாவட்டச் செயலாளருமான செங்கோட்டையன் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் இந்த குழுவில் அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட 106 பேர் பணி குழுவில் இடம் பெற்றிருந்தனர். 

இந்த நிலையில் அதிமுக தேர்தல் பணி குழுவின் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், சுதா.கே.பரமசிவன், முன்னாள் எம்எல்ஏ பி.ஜி.ராஜேந்திரன், ஏ.கே சீனிவாசன், எஸ்.சரவண பெருமாள் ஆகியோர் கூடுதல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS appointed additional incharges in Erode East byelection


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->