வீட்ட வித்தீங்களா? நடுரோட்ல நிற்கிறீர்களா? சிந்தனையே இல்லாத ஸ்டாலின்! போட்டு தாக்கிய பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


அதிமுக சார்பில் மின்கட்டணம் உயர்வை கண்டித்து செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் தலைமை தாங்கி நடத்தி வரும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

அப்போராட்டத்தில் எடப்பாடி கே பழனிச்சாமி "அதிமுக ஆட்சியில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டுவந்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆன்லைன் ரம்மி நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்பொழுது திமுக அரசு சார்பில் சரியான வாதங்கள் எடுத்துவைக்கப்படாததால் தீர்ப்பு ஆன்லைன் ரம்மி நிறுவனத்திற்கு சாதகமாக வந்துவிட்டது. 

ஆனால் இப்பொழுது இருக்கும் சட்டத்துறை அமைச்சர் நான்கு மாதத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்டத்தை கொண்டுவருவோம் என்றார். ஆனால் நான்கு எட்டானது, எட்டு 12 ஆகி தற்பொழுது 15 மாதம் கடந்துவிட்டது இன்னும் அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. பலமுறை நாம் சொல்லியாச்சு. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் சொல்லியாச்சு ஆனால் செவிடன் காதில் சங்கு ஊதன மாதிரி தமிழக முதல்வருக்கு  நாம்  பேசுகின்ற குரல் கேட்கப்படவில்லை.

இதிலும் வேடிக்கையானது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துறாங்கலாம். ஏங்க சூதாட்டத்திற்கு யாராவது கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது உண்டா? உலகத்திலேயே எங்கையும் கிடையாது. 

சூதாட்டத்திற்கு கருத்துக்கேட்க வேண்டும் என்று அறிவித்த ஒரே முதல்வர் தமிழக முதல்வர் ஸ்டாலின்தான்.  என்ன கருத்து கேட்பிங்க மூணு சீட்டில் விளையாடுறீங்களா,ஆறு சீட்டில் விளையாடுறீங்களா, 13 சீட்டில் விளையாடுறீங்களானா கருத்து கேட்பீங்க, இல்ல ஆன்லைன் ரம்மில விளையாண்டு பணத்தை இழந்தீர்களா? 

மனஉளைச்சல் அடைத்தீர்களா, காட்ட வித்தீங்களா, வீட்ட வித்தீங்களா, நடுரோட்ல நிற்கிறீர்களா இப்படியா கருத்து கேட்பு கூட்டம் நடத்தமுடியும். சிந்தனையே இல்லாத முதல்வர். அதனால்தான் பொம்மை முதல்வர் என்று சொன்னேன்'' போட்டு தாக்கி பேசியுள்ளார்.

சில மாதங்களாக உட்கட்சி பூசலால் எதிர்க்கட்சியாக செயல்படாத கட்சி என்று சொல்லப்பட்ட அதிமுக, இன்று நடைபெற்ற ஒரு நாள் ஆர்ப்பாட்டத்தில் கடந்த 15 மாதங்களாக திமுக ஆட்சியில் நடைபெற்ற அனைத்து சம்பவங்களையும் பட்டியலிட்டு விமர்சித்துள்ளது. 

திமுக அரசின்  மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை கண்டு உடன் பிறப்புகள் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திகைத்துப்போய் இருப்பதை சமூகவலைத்தள பதிவுகளே உணர்த்துகின்றன. உடன்பிறப்புகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் சிறந்த ஆளுங்கட்சியாக திமுக செயல்படுமா? என்பதை வரும் காலம் தான் முடிவு செய்யும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps again attack stalin for lot of tn people issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->