பத்திரிக்கையாளரிடம் எகிறிய பிரதமர்.! இணையத்தில் தீயாக பரவும் போட்டோ..!  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் தான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, செய்தியாளரின் செல்போனை ஆத்திரப்பட்டு பறித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.

நாளை இங்கிலாந்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கின்றது. இந்த தேர்தலை ஒட்டி பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது தனியார் செய்தி சேனல் ஒன்றின் செய்தியாளரான ஜோ பைன் என்பவர் லண்டன் அரசு மருத்துவமனையில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் தரையில் படுக்க வைக்கப்பட்டு இருந்த புகைப்படத்தை தன்னுடைய செல்போனில் காட்டி கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதன் காரணமாக எரிச்சலடைந்த பிரதமர் போரிஸ் ஜான்சன் அவருடைய செல்போனை பறித்து தன்னுடைய சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். இந்த காட்சிகளை பதிவு செய்த செய்தியாளர், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

england pm angry photo viral in twitter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->