சமூகவலைத்தளங்களில் பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டு சிறைத்தண்டனை.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கால பிரச்சாரம் இன்று இரவு 7 மணிக்கு நிறைவு பெற்றது.  இரவு 7 மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான விவரங்களை மக்கள் பார்வைக்கு வைக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர், குறுஞ்செய்தி போன்றவைகள் மூலமும், இணையதளம் மூலமாகவும் தேர்தல் விளம்பரங்களை வெளியிட தடை விதிக்கப்படுகிறது.

எந்த ஒரு நபரையும் கவரும் வகையில் எந்த ஒரு இசை நிகழ்ச்சியையும் நடத்தக்கூடாது.

பொதுமக்களை ஈர்க்கும் வகையில் எந்த ஒரு திரையரங்கு செயல்பாடுகளும் இருக்கக்கூடாது.

இந்த விதிமுறைகளை எவ்விதத்தில் மீறப்பட்டால் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தண்டனை வழங்கப்படும்.

இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக விதிக்கப்படும் என்று, தேர்தல் ஆணையத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ELECTION RULE APIRL 4


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->