தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிவிப்பு!! பரபரப்பில் தமிழகம்!!  - Seithipunal
Seithipunal


நாளை பாராளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் உள்ளிட்ட அனைத்து வாக்குகளும் ஒரே நேரத்தில் என்ன இருக்கின்றனர். இதற்கு விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு , "வாக்கு எண்ணும் பணியில் 17 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்களை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 88 பார்வையாளர்கள் இருக்கின்றனர். வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்குகிறது. எட்டு மணிக்கே தபால் வாக்குகளை எண்ண ஆரம்பித்து அதனுடன் பதிவு எந்திரங்களின் வாக்குகளும் எண்ணப்படுகிறது. அதிகபட்சமாக திருவள்ளூரில் 34 சுற்றுக்களாகவும், மத்திய சென்னையில் 19 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

ஒவ்வொரு சுற்று வாக்குப்பதிவும் எண்ணப்பட்டவுடன் முடிவுகள் உடனே வெளியிடப்படும். ஒவ்வொரு சுற்றுகளின் முடிவில் வெளிவர 30 நிமிடங்கள் வரை ஆகும். இதனை ஓட்டர் ஹெல்ப்லைன் மொபைல் ஆப் மூலமாகவும் மக்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், மின்னனு வாக்கு இயந்திரங்கள் மூலம் போடப்பட்ட ஓட்டுகள் எண்ணப்பட்டு பிறகுதான், ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election commission release


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->