#சற்றுமுன்: தமிழகம் வந்த முக்கிய புள்ளிகள்.! தயாராகும் அரசியல் கட்சிகள்.! வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் 2021 ஆம் வருடத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றவுள்ளது. இந்த தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஒருபுறம் தயாராகி வரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ள மக்களும் தயாராகி வருகின்றனர். 

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க 20 இலட்சம் புதிய வாக்காளர்கள் விண்ணப்பித்துள்ளனர். மொத்தமாக சுமார் 20.62 இலட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். 

இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று தமிழகம்வந்துள்ளனர். இன்னும் சற்றுமுன் சென்னை வந்த இந்த குழு, கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது. 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழுவினர் இன்று மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் தேர்தலை ஒரே கட்டமாக நடத்தலாமா? அல்லது 2 கட்டமாக நடத்தலாமா? என்பது பற்றி ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளிடமும் தனித்தனியாக கருத்து கேட்க உள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு முன்னின்று கவனித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election commission meeting in tn


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->