பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி.! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 பணம், பொதுமக்களுக்கு நியாய விலை கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது.

கடந்தாண்டு வழங்கப்பட்டதை போலவே இந்த ஆண்டும், அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும், தலா 1000 ஆயிரம் ரூபாயுடன்  ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு துண்டு, முந்திரி திராட்சை உடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த நவம்பர் 26 ஆம் தேதி அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், அரசி குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு ரூபாய் 1000 வழங்குவதற்கு 2,363 கோடி நிதி ஒதுக்கி, கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து,1000 ருபாய் பணம், பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு துண்டு, முந்திரி திராட்சை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை நவம்பர் 29-ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி தொடங்கிவைத்தார்.

இந்தநிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க கூடாது என திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அனுமதி இல்லை என தமிழக தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படாது.

அதே சமயம், தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க தடை எந்த தடையும் இல்லை என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election commission ban pongal price


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->