தேர்தல் ஆணையத்திடம் சிக்கிய சீமான்.! மாவட்ட ஆட்சியருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த தேர்தல் அதிகாரி.!    - Seithipunal
Seithipunal


நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல், இந்த மாதம் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் அதிமுக, திமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கஞ்சனூரில் பிரச்சாரத்தில் பேசிய சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றது சரிதான் என்றும் என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜீவ்காந்தி என்ற என் இனத்தின் எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும் என சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

சீமானின் இந்த பேசு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சீமானுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.  சென்னையில் சீமானின் உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தி பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காங்கிரஸ் சார்பில் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் 2 பிரிவுகளின் கீழ் சீமான் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சீமான் சர்ச்சை பேச்சு குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தர வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதா சாஹூ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கைக்கு பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election commission action for seman speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->