தமிழகத்தில் புதிதாக மூன்று மாவட்டம்!! முதலமைச்சர் பழனிச்சாமி அறிவிப்பு!!   - Seithipunal
Seithipunal


73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் கலந்துகொண்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். மூன்றாவது முறையாக கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதன்பிறகு மக்களுக்காக உரையாற்றினார்.  

அனைவருக்கும் 73-வது தின சுதந்திர தின வாழ்த்துக்கள். போற்றுதலுக்கும், மரியாதைக்கும் உரிய சுதந்திரத்தை பெற்றுத்தந்த போராட்டத் தலைவர்களை நினைவில் கொள்ளவேண்டிய நாள் இன்று. தமிழக மக்களின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றியதில் பெருமிதம் கொள்கிறேன் என தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி. அண்ணல் காந்தியடிகள் சுதந்திர போராட்டத்திற்கு தலைமை ஏற்று அறவழியில் எதிர்த்துப் போராடி நம் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார். அந்நியரிடமிருந்து இருந்து நம் தாய் மண்ணை காக்க இன்னுயிர் நீத்த பொதுமக்கள் எண்ணில் அடங்காதவர்கள். அவர்கள் தியாகத்தை போற்றும் அதேவேளையில் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதும் நமது கடமை. 

தமிழகத்தில் இந்தியை திணிக்க கூடாது. இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி திணிக்க கூடாது. இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என பேசிய அவர். தற்போது வேலூர் மாவட்டத்தை பிரித்து  திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகியவற்றை தலைமையிடமாகக் கொண்டு மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட இருக்கிறது என முதலமைச்சர் பழனிசாமி. அறிவித்தார். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ஓய்வூதியம் 15 ஆயிரத்திலிருந்து 16 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edppadi announced as vellore as new district


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->