அதிமுக எடுத்த ரகசிய சர்வே! திமுக, தவெக தரப்பிலும் சர்வே... என்ன நடக்குது தமிழக அரசியல் களத்தில்?!
Edappadi Palaniswami ADMK TN Assembly Election survey
2026 சட்டசபை தேர்தல் களத்தில் திமுக கூட்டணியும், அதிமுக-பாஜக கூட்டணியும் முக்கிய அணிகளாக மோத தயாராகின்றன.
இதில் ’முதன்முறையாகத் தேர்தலில் களமிறங்கும்.தமிழக வெற்றிக் கழகம்’ எந்த அணியில் சேரப் போகிது? மூன்றாவது அணியை உருவாகுமா? தனித்துப் போட்டியிடுமா என்ற கேள்விக்கு இன்னும் பல மாதங்கள் விடைகிடைக்காமல் உள்ளது.
இதே நேரத்தில், விஜய் அதிமுக கூட்டணியில் சேர்ந்தால், ஆட்சி பிடிக்க முடியும் என்ற குரல்கள் அதிமுக தொண்டர்களிடையே எழுகின்றன.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பல்வேறு பிரசாரங்களில், "எங்கள் கூட்டணியில் பிரமாண்ட கட்சி ஒன்றும், புதிய கட்சிகளும் சேரப் போகின்றன, எதிர்பார்ப்புகள் நனவாகும்" என்று தெரிவிக்கிறார். 234 தொகுதிகளில் 200-க்கும் மேல் வெற்றி பெறுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
மேலும், அதிமுக கூட்டணியில் சேர விரும்பும் கட்சிகளுக்கு "ரத்ன கம்பளம் விரித்து வரவேற்போம்" என அழைப்பு விடுத்துள்ளார். இதனால், எத்தனை கட்சிகள் சேரும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
வெறும் எட்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் அனைவரும் தனிப்பட்ட சுயமேம்பாட்டு ஆய்வுகள் மற்றும் கருத்துக்கணிப்புகள் மூலம் மக்களின் மனநிலையை தெரிந்து கொள்ள முயற்சி செய்கின்றனர்.
திமுக அரசு உளவுத்துறை மூலம் நிலவரங்களை அறிந்து வருகிறது. சபரீசனின் (cm ஸ்டாலின் மருமகன்) பென்டீம் நிறுவனம் தொகுதி வாரியாக கணிப்பு செய்கிறது.
விஜய் கட்சிக்காக ஆதவ் அர்ஜூனா தலைமையிலான ’வாய்ஸ் ஆப் காமென்’ அமைப்பு கணிப்புகளை வழங்குகிறது.
அதிமுகவுக்கு, எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் தனி ஏஜென்சி மூலமாக தேர்தல் நிலவரங்களை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறிந்து வருகிறார். அதனடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அரசியல் திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார்.
English Summary
Edappadi Palaniswami ADMK TN Assembly Election survey