வெற்றி பெற்ற உடனே, தமிழகத்திற்கு பாஜக செயல்படுத்த உள்ள புதிய திட்டம்.! நன்றி தெரிவித்த தமிழக முதலவர்.!! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், மத்தியில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்போகிறது. இருப்பினும், தமிழகத்தில் மாட்டும் பாஜக நின்ற அனைத்து இடங்களிலும் கணிசமான ஓட்டுக்களை பெற்று தோல்வியை அடைந்துள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழக பாஜக டுவிட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். டுவிட்டரில் பதிவு செய்தவை, என்னுடைய முதல் பணி கோதாவரி - கிருஷ்ணா நதியை இணைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டுவருவதுதான் என்று பதிவு செய்துள்ளார். 

மேலும் இந்த பதவியில் தமிழகம் பாஜகவை புறக்கணித்தாலும் தங்களது கடமையை பாஜக மேற்கொள்ளும் என்றும் இதுதான் பாஜக என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு நிதின் கட்கரி கூறியதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், " நிதின் கட்கரிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். கிருஷ்ணா- கோதாவரி இணைப்பு என்பது மிகவும் முக்கியமானது. தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறையை இத்திட்டம் போக்கும்." என அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy thanks to nitin gadkari


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->