முதலமைச்சர் திடீர் ஆலோசனை கூட்டம்.! ஒரே இடத்தில் கூடிய அமைச்சர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது, பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு தினங்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளனர்.

மழை பாதிப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரண்டு முறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மூன்றாவது முறையாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த கூட்டத்தில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பினால் அதனை உடைத்து மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல் எவ்வாறு காப்பது என்பது குறித்தும் இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களைக் காப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy meeting in rain


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->