அத்திவரதர் தரிசிக்க வந்த நான்கு பேர் உயிரிழப்பை தொடர்ந்து., அவசர ஆலோனையில் முதல்வர்!! - Seithipunal
Seithipunal


கடந்த ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார் 20 வது நாளான இன்று மதிய நிலவரப்படி சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ள நிலையில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் தரிசனத்துக்கு வரிசையில் நின்று காத்து கிடக்கின்றனர். தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள் மேற்கு ராஜகோபுரம் மற்றும் நிழல் கூரைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் ஓய்வெடுக்கும் நிலையில் நெரிசலை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு அவர்களை போலீசார் வெளியேறி வருகின்றனர்.

தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் போலீஸ் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர், கோவில் அருகே ஏற்கனவே 250 தீயணைப்பு வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மீட்பு பணிகளுக்காக கூடுதலாக  150 வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார் அதுபோல் குடிநீர் வழங்குதல் புதியவர்களை தரிசனத்துக்கு அழைத்து செல்லுதல் உள்ளிட்ட பணிகளை ஏற்கனவே 500 பேர் இருந்த நிலையில் தற்போது 2000 பேர் பணியில் உள்ளனர்.

அத்திவரதர், தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு, கோவிலில் மாவட்ட நிர்வாகம் போதுமான வசதிகளை செய்யவில்லை எனவும் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்களை உடனடியாக அனுப்பி வைத்து போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில், அத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்திவருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy discussed about athivarathar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->