அதிமுக நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈபிஎஸ்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக மற்றும் திமுக  உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அனைத்தும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகளும், பாஜகவிற்கு 20 தொகுதிகளும், தமாகாவுக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் 6 பேர், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 171 பேர், மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 2 பேர் என இதுவரை மொத்தம் 179 சட்டமன்ற தொகுதிகளுக்கு அதிமுக தலைமை வேட்பாளரை அறிவித்துள்ளது. 

இதையடுத்து, அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார். ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இந்நிலையில், சேலம் புறநகர் அதிமுக அலுவலகத்தில் வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி திடீரென ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் பிரச்சாரம், தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஈபிஎஸ், வேட்பாளர்களை ஆதரித்து தனது பிரச்சாரத்தை நேற்று சேலத்தில் இருந்து தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy consultation in salem


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->