ராமசாமி படையாச்சியார் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட தமிழக அரசு!! - Seithipunal
Seithipunal


வன்னியகுல சத்திரிய பொதுச் சொத்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அகில இந்திய வன்னிய குல சத்திரிய சங்கங்களின் பேரமைப்பு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கும் சென்னையில் பாராட்டு விழா நடைப்பெற்றது. அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியாரின் முழு உருவ படம் திறந்துவைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

சுதந்திர போராட்ட வீரரும், மூத்த அரசியல்வாதியுமான ராமசாமி படையாச்சியாருக்கு ஏற்கனவே தமிழக அரசு சார்பில் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 2 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள நினைவுமண்டபத்திற்கு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்றுவருகிறது விரைவில் அந்த கட்டிடம் திறக்கப்படவுள்ளது.

அதே போல் ராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 16 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என ஏற்கனவே  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தப்படி ராமசாமி படையாச்சியாரின் திருவுருவ படம் சட்டப்பேரவையில் முதலமைச்சரால் திறந்து விரைவில் தமிழக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் அமரும் ஐந்தாவது மற்றும் ஆறாவது பாகத்துக்கு இடையே இந்த படம் அமைக்கப்படவுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy announcement about ramasamy padaiyatchar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->