இந்த தொழிலை யார் வேண்டுமானலும் தொடங்குங்கள்., விரைவில் அனுமதி தருகிறோம் என அறிவித்த தமிழக அரசு!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சுகாதாரத்துறை, போக்குவரத்துறை, பால்வளத்துறை ஆகிய துறைகள் தொடர்பான 18 அறிவிப்புகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் இன்று வெளியிட்டுடார்.  நடப்பாண்டில், 600 கோடி ரூபாய் மதிப்பில் 2000 புதிய பேருந்துகள், வாங்கப்படும் என்றும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், புற்று நோய்க்கான மேன்மைமிகு மையம், 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். 

காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனையில் புற்று நோய்க்கான மேன்மைமிகு மையம் ஒன்று 120 கோடி ரூபாய்  திட்ட மதிப்பீட்டில்  ஏற்படுத்தப்படும் எனவும். கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 105 கோடி ரூபாய் செலவில் நலவாழ்வு மையங்களாக மாற்றி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். ஆர்வமுள்ள தொழில் நிறுவனங்களின் சமூக பங்களிப்புடன், எனது மருத்துவமனை, எனது பெருமை என்ற புதிய திட்டம் முன்னெடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

மேலும், கரூர், தருமபுரி, தேனி, தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்டமாவட்ட தலைநகரங்களை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும் என அறிவித்த முதலமைச்சர், இதனால், ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படும் பால், நாளொன்றுக்கு 33 லட்சம் லிட்டரிலிருந்து, 35 லட்சம் லிட்டராக உயரும் என தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பேசிய பால் வளத்துரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் பாலகங்கள் துவக்க உரிய முறையில் அனுமதி கோரும்பட்சத்தில்  யாருக்கு வேண்டுமானாலும் ஜாதி மத பேதம் பார்க்காமல் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy announced many new schemes


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->