எடப்பாடி போட்ட அதிரடி திட்டம்.. டெல்லி புறப்படும் ஜி.கே. வாசன்.. கடுப்பில் ஓபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


மாநிலங்களவை எம்பிக்கள் 51 பேரின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. காலியிடங்களில் பெரும்பாலானவற்றை பாஜகவும், காங்கிரசும் கைப்பற்ற இருப்பதால், இரண்டு கட்சிகளுக்கும் மாநிலங்களவையில் பலம் கூடும். 

தமிழகத்தில் இருந்து விஜிலா சத்யானந்த், மேட்டுப்பாளையம் செல்வராஜ், முத்துகருப்பன், சசிகலா புஷ்பா, திருச்சி சிவா மற்றும் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட 6 மாநிலங்களவை எம்பிகளின் பதவிக்காலமும் வருகிற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது.

தற்போது இந்த ராஜ்யசபா எம்பி சீட்டிற்கு கடும் போட்டி நிலவி வருகிறது. அதிமுகவுக்கும், திமுகவுக்கு தள 3 எம்பி சீட்டு கிடைக்க உள்ளதால் இரு கட்சியினரும் போட்டி போட்டுக்கொண்டு, எம்பி சீட்டை கேட்டு வருகின்றனர். 

அதிமுகவில் தனது ஆதரவாளர்களுக்கு சீட்டை ஒதுக்க வேண்டும் என எடப்பாடி விரும்புவதாக கூறப்படுகிறது. மூன்றில் ஒன்றாவது தனது ஆதரவாளர்களுக்கு வாங்கிவிட வேண்டும் என்று ஓ.பி.எஸ் எதிர்பார்க்கிறார் என்ற தகவலும் வெளியியுள்ளது.

இந்நிலையில் தமாகா தலைவர் ஜிகே வாசன் அதிமுகவிடம் இருந்து ஒரு ராஜ்யசபா சீட் எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

அதோடு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் டெல்லிக்கு நீங்கள் வர வேண்டியிருக்கும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியதால் விரைவில் ஜி.கே.வாசன் டெல்லிக்கு செல்ல உள்ளார். இந்த பயணத்தின் போது ராஜ்யசபா சட்டத்தை ஒதுக்க, அதிமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்க பாஜகவிடம் கூற போவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi new plan for mp post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->