தமிழக சட்டமன்ற தேர்தலில் நேருக்கு, நேர் மோதும் இளசுகளும், பெருசுகளும்..! - Seithipunal
Seithipunal


அரசின் குறைதீர்ப்பு முகாம்களில் கலந்து கொள்ளும் பலரும் முதியோர் உதவித்தொகைக்காக தான் மனுக்களை கொண்டு வருகின்றனர். ஒல்டு ஏஜ் பென்ஷன் எனப்படும் OAP திட்டம் குறித்த முன்னெடுப்பை தான் முதல்வர் தற்போது தீவிரமாக செயல்படுத்தி வருகின்றார். 

OAP, edappadi palanisamy, seithipunal

58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதியோர் உதவித் தொகையை முறையாக சென்று சேர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். 55 வயதிற்கு மேற்பட்ட பலரும் எம்ஜிஆர், ஜெயலலிதா மீது குறிப்பாக இரட்டை இலை மீது தீராத காதல் கொண்டவர்கள்.  எனவே, அவர்களது வாக்கு வங்கிகளை மொத்தமாக அள்ள இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வகுத்து இருக்கின்றார். 

திமுகவினரும், புதிதாக முளைத்த பல கட்சிகளும் இளைஞர்களின் ஓட்டுக்களை குறிவைத்து ஐடி விங், சோஷியல் மீடியா, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் சங்கம், மாணவர் சங்கம் என வியூகம் வகுத்து வருகின்றனர். இதன் காரணமாகத்தான் திமுகவில் கூட இளைஞர்களை ஈர்க்கும் பொருட்டு உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளர் ஆக்கி தற்போது பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது. 

edappadi palanisamy

இப்படி பலரும் இளசுகளின் வாக்குகளை குறிவைக்கும் நேரத்தில், மறுபுறம் எடப்பாடியோ பெருசுகளின் வாக்குக்களை குறிவைத்து காய் நகர்த்தி வருகின்றார். எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் இளசுகளும், பெருசுகளும் தான் மோதிக்கொண்டு தேர்தல் வெற்றியை முடிவு செய்வார்கள் என கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi and stalin plan about 2021 election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->