அமமுக, திமுக இடையேயான ரகசிய கள்ளத்தொடர்பை போட்டுடைத்த முதல்வர்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தநிலையில் சூலூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய தமிழக முதல்வர், "ஸ்டாலினும், டிடிவி தினகரனும் வெளியே எதிரி போல் காட்டிக் கொண்டு, ரகசிய கள்ளத்தொடர்பு வைத்துள்ளனர். தனது கட்சியின் வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடாமல், அதிமுகவின் வெற்றியைத் தடுக்கவே தினகரன் செயல்படுகிறார்" என கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், திமுகவும் அமமுகவும் கூட்டு என்பதை தங்க தமிழ்செல்வன் வெளியே போட்டு உடைத்துவிட்டார். இந்த தேர்தலை அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் தேர்தலாக பார்க்கிறோம். திமுகவும் நாங்களும் சேர்ந்தால் தான் இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப முடியும் என தங்க தமிழ்செல்வன் கூறியிருந்தார். 

அதிமுக மக்களுக்காக செயல்படும் இயக்கம். திமுக குடும்பத்திற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். அது ஒரு கட்சி இல்லை, ஒரு கம்பெனி. அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வரமுடியும் என்பதற்கு நானே உதாரணம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edapadi palanichami talk about DMK and AMMK


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->