தமிழக பள்ளி மாணவர்களுக்கு கொரோனா எதிரொலி.! முன்னாள் முதல்வர் இபிஎஸ் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதேபோல் தமிழகம் முழுவதும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு கொரோனா நோய் பரவல் உறுதியாகி வருகிறது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களிடம் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்க்கு அவர் அளித்துள்ள பதிலில், "தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாணவர்களுக்கு தொற்று ஏற்படுவதை கண்டு பெரும் அச்சத்தில் பெற்றோர்கள் இருக்கின்றார்கள்.

இதனை தமிழக அரசு உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இதை அரசு கவனமாக கையாள வேண்டும். இன்றைக்கு பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பெற்றோரும் தனி கவனம் செலுத்த வேண்டும்.

இந்த நோய்த்தொற்று காலகட்டத்தில் மாணவர்கள் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி கல்வி கற்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம்" என்று எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ec cm EPS say about school reopen


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->