நாட்டு சக்கரையில் ஆபத்து! கரும்பே இல்லை அஸ்கா! பீதியை கிளப்பும் அறிக்கை! - Seithipunal
Seithipunal


நாட்டு சர்க்கரையில் அஸ்கா, ரசாயன கலப்பை தடுத்து, ரசாயனம் இல்லாத நாட்டு சர்க்கரை உற்பத்தியை அதிகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கொமதே கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருபதாவது, "பெரிய சர்க்கரை ஆலைகள், ரசாயனம் பயன்படுத்தி, வெள்ளை சர்க்கரையை (அஸ்கா) தயாரிக்கின்றனர். இவை உடல் நலத்துக்கு கேடானது என்பதால், நாட்டு சர்க்கரை, வெல்லத்துக்கு மக்கள் மாறுகின்றனர். ஒரு கிலோ அஸ்கா, 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாட்டு சர்க்கரை, 90 ரூபாய் முதல், 140 ரூபாய் வரையிலான விலையில் விற்கப்படுகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான நாட்டு சர்க்கரை தயாரிப்பாளர்கள், விவசாயிகளிடம் கரும்பை வாங்கி கரும்பு சாற்றில் இருந்து தயாரிக்காமல், ஆலைகளிடம் அஸ்கா சர்க்கரையை வாங்கி, கலப்படம் சேர்த்து, அதிக விலைக்கு மக்களிடம் நாட்டு சர்க்கரை என விற்கின்றனர். கரும்பு விவசாயிகளிடம் கரும்பை வாங்காமல், பலரும் நாட்டு சர்க்கரை தயாரிப்பதாக புகார் எழுந்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

அஸ்கா சர்க்கரையை நிறம் மாற்றி, நாட்டு சர்க்கரை எனக்கூறி விற்பனை செய்வதை, அரசும், அதிகாரிகளும் வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாமக்கல் எம்.பி., சின்ராஜ், நாட்டு சர்க்கரை ஆலைகளில், அதிகாரிகள் துணையுடன் ஆய்வு செய்து, பல முறைகேட்டை கண்டறிந்துள்ளார். நாமக்கல் மாவட்ட நாட்டு சர்க்கரை ஆலை உரிமையாளர்களிடம், அவர் பேசியபோது, 'தமிழகத்தில் உள்ள அனைத்து நாட்டு சர்க்கரை ஆலைகளிலம் ஆய்வு செய்து தவறை சரி செய்தால் மட்டுமே, சீரான விலையில் நாட்டு சர்க்கரையை விற்க முடியும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, நாட்டு சர்க்கரையில் கலப்படம் செய்வோருக்கு அதிகாரிகள் துணை போகாமல், மக்களின் நலன் கருதி துாய்மையான நாட்டு சர்க்கரை விற்பனைக்கு வழி செய்ய வேண்டும்". என்று ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

E R Eswaran request to govt officer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->