திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றி பெற்றது செல்லாது.. உயர் நீதிமன்றத்தில் வழக்கு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில் 10 வது முறையாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வி. ராமு, அமமுக சார்பில் ராஜா, நாம் தமிழர் கட்சி சார்பில் திருக்குமரன் ஆகியோர் போட்டியிட்டனர். 

அதிமுக வேட்பாளர் ராமுக்கும், துரைமுருகனுக்கும் கடும் போட்டி நிலவியது. ஆரம்பம் முதலே பின்னடைவை சந்தித்து வந்த துரைமுருகன், இறுதியில் 745 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றி பெற்றதை எதிர்த்து அதிமுக சார்பில் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராமு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஈவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

duraimurugan victory case against admk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->