வேலூர்: துரைமுருகனுக்கு பேரிடி.! அதிரடி காட்டும் அமலாக்கத்துறை.?! கைதாக வாய்ப்பு.!  - Seithipunal
Seithipunal


கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பொழுது வேலூரில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உடைய ஆதரவாளர்களான பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் மற்றும் கனரா வங்கியின் முன்னாள் சீனியர் மேனேஜர் தயாநிதி 3 பேர் மீதும் செப்டம்பர் 22-ஆம் தேதி சிபிஐ வழக்கு பதிவு செய்து இருக்கின்றது. 

இதனை தொடர்ந்து இதன் மீதான விசாரணை துவங்கியுள்ளது. நேற்று சிபிஐ அதிகாரிகள் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அதிரடி சோதனை போட்டனர். மேலும், அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டு இருக்கின்றனர். வங்கியின் முன்னாள் மேனேஜர் உட்பட இரண்டு பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர சிபிஐ முடிவு செய்தது. 

இதனை தொடர்ந்து, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை 200 ரூபாய் நோட்டாக மாற்றியதாக கதிர் ஆனந்த் மீது காட்பாடி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கில் சிபிஐ தொடர்ந்து அமலாக்கத் துறையும் விசாரணையை மேற்கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது. 

குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது அடுத்த கட்ட விசாரணையை மேற்கொள்ளவும், கைது நடவடிக்கை எடுப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இது துரைமுருகன் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

duraimurugan supporters may arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->