#BigBreaking : அய்யோ., அம்மா., சற்றுமுன் சட்டப்பேரவையில் துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர்.!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

இன்று தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட், தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதால், இந்த பட்ஜெட் தாக்கலின் போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது தமிழக மக்களை கவரும் விதமாகவும், பெண்கள், இளைஞர்களுக்கான பல்வேறு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும், அதற்கான நிதிகளும், ஏற்கனவே செயல்பட்டு வரும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

சற்றுமுன் தொடங்கிய சட்டப்பேரவையில், இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உரையாற்றிவருகிறார்.

இதற்கிடையே சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் நாங்கள் எங்களை கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று அனுமதி கேட்டார். அப்போது சபாநாயகர் இது சபை மாண்பு முறை அல்ல என்று கூறி அனுமதி மறுத்தார். இதனால் துரைமுருகன் கூச்சல் இட ஆரம்பித்தார். அவருக்கு துணையாக திமுக உறுப்பினர்களும் கூச்சல் இட தொடங்கினர். 

இருப்பினும் ஓபிஎஸ் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

duraimurugan sound in assembly


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->