திமுக கூட்டணியில் காங்கிரஸ்?! துரைமுருகன் போட்ட ஒரே போடு.,! ஆக.,! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என திமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். புதுச்சேரியில் திமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக ஜெகத்ரட்சகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் காங்கிரஸ் - திமுக இடையே சலசலப்பு நிலவி வருகிறது. 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழநாடு மாநில தலைவர் கே எஸ் அழகிரி தெரிவிக்கையில், "புதுவையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி எந்த குழப்பமும் இல்லை. அங்கு ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தால் அது பேசி தீர்த்துக் கொள்ளப்படும். புதுவை பொருத்தவரை அந்த மாநில தலைவர்கள்தான் இதுபற்றி கருத்துகளை தெரிவிக்க வேண்டும். ஒருவேளை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட அதை தீர்த்துக் கொள்ளும் நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

 காங்கிரஸைப் பொறுத்தவரையில் எல்லாவற்றுக்கும் எப்போதுமே தயாராக இருக்கிறது. எங்களை பொறுத்தவரை நண்பர்களுடன் எப்போதுமே நண்பர்களாகவே இருக்க விரும்புகிறோம். நண்பருடன் நாங்கள் ஒருபோதும் பகையை ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஒருவேளை அதற்கு வாய்ப்பு இல்லாத பட்சத்தில் நாங்கள் தனித்துப் போட்டியிடும் தயாராக இருக்கிறோம். அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி தனித்து செய்வதை பாராட்டுகிறேன் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

இன்று காட்பாடியில் துரைமுருகன் அளித்துள்ள பேட்டியில், "வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தனித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இதனை திமுக வரவேற்கிறது. அதிமுக கூட்டணியில் இருந்து ஒரு சில கட்சிகள் வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எங்களை நம்பி யார் கூட்டணி அமைக்க வந்தாலும் திமுக நிச்சயம் அவர்களை வரவேற்கும்" என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

duraimurugan say about congress election campaign


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->