துரைமுருகனை பொரி வைத்து பிடித்தது எப்படி? சின்ன விஷயத்தில் சிக்கிய பரிதாபம்.!! பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரின் மகன் வீடு, கல்லூரி, அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.

துரைமுருகன் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த சனிக்கிழமை இரவு வரை நடத்திய சோதனையில் துரைமுருகன் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் ரொக்கம், சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி இருந்தனர்.

இதன்தொடர்ச்சியாக நேற்று, திமுக விவசாய அணி மாநகர துணை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு, அவரின் சகோதரி விஜயாவின் சிமெண்ட் கிடங்கில் இருந்து சாக்கு மூட்டை மற்றும் அட்டைப் பெட்டிகளில் இருந்து கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள், வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து, வெளியான காணொளியில் வாக்காளர்களுக்கு வார்டு வாரியாக பணம் கொடுக்க, லிஸ்ட் போட்டு கட்டு காட்டாக கட்டி வைத்திருக்கும் காணொளி, தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், எப்படி வருமான வரித்துறையினரிடம் இந்த பணம் சிக்கியது எப்படி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வேலுாரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்திய போது, பணத்தை வார்டு வாரியாக பண்டல் போட, ஒரு லட்சம் கவர்கள் வாங்கி கொண்டு சென்ற வாகனம் சிக்கியுள்ளது. 

அப்போது அதிகாரிகள் அந்த வாகனத்தை விடுவித்தனர். ஆனால், அதிகாரிகள் ஒருவரை அந்தவாகனம் எங்கு செல்கிறது என்று நோட்டமிட பின் செல்ல, அந்த வாகனம் நேராக துரைமுருகன் வீட்டுக்கு சென்றுள்ளது.

பின்னர் அங்கிருந்து பூஞ்சோலை சீனிவாசன் வீட்டுக்கு அந்த வாகனம் சென்றுள்ளது. இதனை வைத்தும், ஒரு சில ரகசிய தகவலின் அடிப்படையிலும் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை ரெய்டில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து துரைமுருகன் தெரிவிக்கையில், ''இந்த பணத்திற்கும் தனக்கும் சம்மந்தமில்லை'' என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

duraimurugan raid issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->