இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன #டுபாக்கூர் சீமான்.!  - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கையில், " அரசியல் என்பது மக்களின் மீது அதிகாரத்தை செலுத்தும் விவகாரம் அல்ல. மக்களுக்காக ஆற்றும் தொன்றே அரசியல். 

தேர்தல் களப்பணிகள் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சிறப்பாக நடந்து வருகிறது. நாங்கள் ஒற்றைக்கட்சி ஆட்சிமுறையை எதிர்க்கிறோம். எம்.ஜி.ஆரை பொறுத்த வரையில், இலங்கையில் தமிழருக்கான போரில் உறுதுணையாக இருந்தார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், எம்.ஜி.ஆர் - கருணாநிதி தமிழகத்திற்கு செய்தது என்ன?. அன்றைய காலத்திலேயே தமிழகத்திற்கான உரிமையை விட்டுக்கொடுத்து வந்தார்கள்.

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிக்கும் கமலுக்கும் கொடுக்கின்ற அடியில், தமிழ்நாட்டில் இனி எந்த ஒரு நடிகனும் சினிமாவில் நடித்தால் சிஎம் ஆகலாம் என்ற கனவுக்கு வரக்கூடாது" என்று சீமான் அந்த பேட்டியில் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள் நீங்கள் சொன்ன கூற்று நடிகர் ரஜினி கமலுக்கு மட்டும் தானா அல்லது விஜய்க்கும் சேர்த்து தானா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், "எல்லோருக்கும் இது பொருந்தும்" என்று காட்டமாக பதில் அளித்தார்.

இந்நிலையில், நடிகர் விஜயின் ரசிகர்கள் #டுபாக்கூர் சீமான் என்று சமூகவலைத்தளமா ட்வீட்டரில் ஹேஸ்டேக் மூலம் சம்பவம் செய்து வருகின்றனர். இந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dubakkur seeman trend in twitter


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->