பாட்டாளிகளை கொண்டு ஆயிரம் கிராமங்களில் அக்னி கலசம் அமைப்பேன்.! கயவர்களை விடவே கூடாது.! கடுங்கோபத்தில் டாக்டர் ராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


சின்ன சேலத்தில் அக்னிகலச சின்னம் சேதப்படுத்தியதற்கு  பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக்கம்ப மேடையில் அமைக்கப்பட்டிருந்த  அக்னி கலசத்தையும், சிங்கம் சிலையையும் சமூக விரோதிகள் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். கோழைத்தனமான இந்த ஈனச் செயல் கண்டிக்கத்தக்கது. 

கொள்கை அடிப்படையில் பா.ம.க.வை எதிர்கொள்ள துணிச்சல் இல்லாத கோழைகள் தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள். இதன்மூலம் பா.ம.க.வின் வளர்ச்சியை தடுக்க முடியாது. ஒரு கிராமத்தில் அக்னி கலசம் சேதப்படுத்தப்பட்டால் ஆயிரம் கிராமங்களில் அக்னி கலச சின்னம் பாட்டாளிகளால் அமைக்கப்படும்.

மண்மலை கிராமத்தில் பாட்டாளிகளின் அடையாளமான அக்னி கலசத்தையும், சிங்கச் சிலையையும் சேதப்படுத்திய கயவர்களை மன்னிக்கக் கூடாது.  அவர்களை உடனடியாக கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drramdoss angry tweet for damage vanniyar identity


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->