போலீசாரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இருளர் இன பெண்கள் - நீதிமன்ற உத்தரவை உடனே அமல்படுத்துக - மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


இருளர் சமுதாய பெண்களுக்கு உடனடியாக ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திருக்கோவிலூரில் காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 4 பெண்கள் உள்ளிட்ட  15 இருளர் மக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் ஆணையிட்டுள்ளது. இது போதுமானதல்ல என்றாலும் இதை அரசு உடனே வழங்க வேண்டும்!

இருளர் இன பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய காவலர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டதைத் தவிர, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குற்றம் இழைத்த காவலர்கள் மீது உடனடியாக துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருளர் இன பெண்கள் காவலர்களால் சீரழிக்கப்பட்ட வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. இது குறித்து கடந்த மாதம் இதே நாளில் அறிக்கை வெளியிட்டுள்ளேன். இந்த வழக்கை விரைந்து முடித்து  பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.

இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் உள்ள பிழைகளை திருத்தி  மீண்டும் தாக்கல் செய்யும் பணியைக் கூட  செய்யாமல் காவல்துறை இழுத்தடித்து வருகிறது. இந்த வழக்கை கண்காணிக்க பொறுப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrRamadoss Say About Thirukovilur Irular Woman Case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->