ஒரு ஏக்கருக்கு ரூ.3783 இழப்பீடு, இது உழவர்களின் துயரத்தை எந்த வகையில் போக்கும்? - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி.,! - Seithipunal
Seithipunal


மழை - வெள்ள பாதிப்புகளுக்கான அரசின் நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையில் சேதமடைந்த 4,44,988 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களுக்கு வெறும் ரூ.168.35 கோடி இழப்பீடு மட்டும் 3,16,837 விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. உழவர்களுக்கான இந்த இழப்பீடு எந்த வகையிலும் போதுமானது அல்ல!

4,44,988 ஏக்கருக்கு ரூ.168.35 கோடி என்றால் ஓர் ஏக்கருக்கு 3783 ரூபாயும்,  ஓர் உழவர்க்கும் 5313 ரூபாயும் மட்டும் தான் இழப்பீடாக கிடைக்கும்.  இதுவரை வழங்கப்பட்ட ரூ. 97.92 கோடி இழப்பீட்டில் 2,23,788 உழவர்களுக்கு சராசரியாக ரூ.4375 மட்டுமே கிடைத்திருக்கிறது!

பல்லாயிரக்கணக்கில் முதலீடு செய்து, மாதக்கணக்கில் சாகுபடி செய்த உழவர்களுக்கு  இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.3783, தனிமனிதருக்கு ரூ.4375 மட்டுமே வழங்குவது எந்த வகையில் நியாயம்? ரூ.3783 இழப்பீடு  உழவர்களின் துயரத்தை எந்த வகையில் போக்கும்? இதுவா உழவர் நலன் காக்கும் நடவடிக்கை?

மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு  உரிய இழப்பீடு வழங்கப்பட்டால் தான் அவர்கள் கடன் சுமையிலிருந்து மீள்வார்கள். அதனால், பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DrAnbumaniRamadoss Say About Farmers issue jan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->