டாக்டர் .ராமதாசும் பேசிய அதிசயம் அரசியல்..! - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வரும் 2021ம் ஆண்டு அதிசயம் நிகழம் வேண்டும் என்று பேசியிருந்தார். 

அதேபோல, பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாசும் அதிசயம் நிகழவேண்டும் என இன்று கூறியுள்ளார். ஆனால் டாக்டர்.ராமதாஸ் அதிசயம் நிகழவேண்டும் என கூறியது தமிழக அரசியலில் இல்லை இலங்கை அரசியலில் அதிசயம் நிகழவேண்டும் என கூறியுள்ளார். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் ராமதாஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

அதில், மாவீரர்கள் மண்ணில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மொழி, கலாச்சார, பண்பாட்டு சீரழிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை; தாங்கிக் கொள்ள முடியாதவை. இந்த சீரழிவுகளை சரி செய்து தமிழர்களின் உன்னத, அறம் சார்ந்த வாழ்க்கை முறையை மீட்டெடுக்கவாவது அந்த மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும். 

பின்வாங்கா போர்த்திறன், அறம் வழுவா ஆட்சி திறன், மதுவை மக்களிடம் நெருங்க விடா மாவீரன் பிரபாகரனுக்கு 65ஆவது பிறந்த நாள் வாழ்த்துகள். படைகளால் மட்டுமின்றி, பழக்கவழக்கங்களாலும் சீரழிந்து கிடக்கும் தமிழீழத்தை சீரமைத்து, சிறப்பான ஆட்சி வழங்குவதே புலிகளின் தலைவனுக்கு செலுத்தும் மரியாதை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramdhass tweet about changes in politics


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->