கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்! மருத்துவர் இராமதாஸ் போட்ட ட்வீட்! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடியின் 70-வதுது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள சூரத் நகரில் 70 ஆயிரம் மரக்கன்றுகளை நட அம்மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தால் நாள் இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதும் கொண்டாடி நிகழ்ச்சிகளில் பாஜகவினர் பல ஏற்பாடுகளை செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக குறைந்த அளவிலேயே ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி  அவர்களுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து ட்வீட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"70 ஆவது பிறந்தநாள் காணும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அனைத்து நலன்கள் மற்றும் வளங்களுடன் நூற்றாண்டு கடந்து ஆரோக்கியமாக   வாழ வாழ்த்துகிறேன். பொது வாழ்வில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி சாதனைகளை படைக்க வாழ்த்துகள்." என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss wish to pm modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->