மூன்றே டுவிட்டில், நச்சுன்னு சொல்லி முடித்த டாக்டர் ராமதாஸ்! கிடைத்த அமோக ஆதரவு!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். நாட்டுக்கு ஒரு மொழி இருப்பது அவசியம். அது, உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால், ஒரே மொழி அவசியம், ஒரே மொழியால் ஒற்றுமையை கட்டமைக்க முடியும் என்றால், அது இந்தி மொழியே, இந்தி மொழி அதிகமான மக்களால் பேசப்படும்
மொழியாகும் என  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை குறிப்பிட்டு இருந்தார். 

இந்த கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் பகிரங்கமான எதிர்ப்பு உண்டாகியிருக்கிறது. அமித் ஷா பேச்சுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அவர் மூன்று டுவிட்களில் இந்த பிரச்சனையின் வீரியம் குறித்து தெளிவாக எடுத்து கூறியுள்ளார். 

டுவிட்டரில் கூறியிருப்பதாவது, "இந்தியாவின் ஒற்றை மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து தவறானது. இந்தி மொழி நாளில் இந்தியை உயர்த்திப் பேச அவருக்கு உரிமை உண்டு. ஆனால், பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது!.

உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக இந்தி ஒருபோதும் திகழ முடியாது. இந்தியாவுக்கு இந்தியை அடையாமாக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட பிற மொழி பேசும் மாநிலங்களின் அடையாளங்களை பறிக்க முயல்வது கண்டிக்கத்தக்க செயல் தானே?

இந்தியாவில் அதிகம் பேரால் பேசப்படும் மொழி என்பதாலேயே இந்தி அனைத்து மக்களையும் ஒருமைபடுத்தி விடாது. பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும். உலகின் பல நாடுகளில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன" என பதிவிட்டுள்ளார். 

டாக்டர் ராமதாஸின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Tweets about amit shah hindi speech


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->