விக்கிரவாண்டியில் உளறிய ஸ்டாலின்! சிக்கிய ஸ்டாலினை வச்சு செய்த ராமதாஸ்!  - Seithipunal
Seithipunal


இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர் பெரும்பான்மையாக இருக்க, திமுக தலைவர் ஸ்டாலின் திடீரென அரசியலுக்கு வந்தவர் போல, 50 வருடம் முன்பு இறந்த ஏ. கோவிந்தசாமி, 30 வருடம் முன்பு போராடிய இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு மணிமண்டபம் ஆட்சிக்கு வந்தால் காட்டுவோம் என அறிவித்த்துள்ளார். ஆட்சிக்கு வந்தால் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. 

இதனை மையாக வைத்து எப்படியாவது வன்னியர் வாக்குகளை அறுவடை செய்ய நினைத்தவருக்கு பாமக பதிலடி கொடுக்க ஆரம்பிக்க, விழுப்புரத்தில் வன்னியர்களை எல்லாம் ஒதுக்கிய ஸ்டாலின், தருமபுரி, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து வன்னிய தலைவர்களை தேடி பாமகவிற்கு எதிராக அறிக்கை விட, அது பெரிய அளவில் எடுபடவில்லை. 

அந்த பதற்றத்தில் இருக்கும் ஸ்டாலின், விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் உளறிவிட்டார். அதனை நோட் செய்த பாமக நிறுவனர் ராமதாஸ், டுவிட்டரில் இரண்டே பதிவில் ஸ்டாலினின் அக்கறை இதுதான் என பதிலடி கொடுத்துள்ளார். 

ட்விட்டர் பதிவானது, "திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் அமைக்கப் போவதாக விக்கிரவாண்டியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்திருக்கிறார். இராமசாமி படையாட்சியருக்கு கடலூரில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கிறது.

இந்த உண்மை கூட தெரியாமல் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். வன்னியர் தலைவர் குறித்த நிகழ்கால நிலவரம் கூட தெரியாத இவர் தான் வன்னியர் நலனைக் காப்பாற்றப் போகிறாராம். இது தான் காலக் கொடுமை போலிருக்கிறது!" என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss tweet about stalin wrong information


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->