பிசிஆர் வழக்கு விவகாரம்! உச்சநீதிமன்றத்தின் தோல்வி அல்லவா? டாக்டர் ராமதாஸ் ஆவேசம்!  - Seithipunal
Seithipunal


எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருந்து உரிய விசாரணையின்றி கைது செய்யப்படும் பிரிவை நீக்கி கடந்த 2018 மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது அந்த உத்தரவை திரும்ப பெற்றுள்ளது. அதன்படி, எஸ்.சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் கைது செய்ய தடையில்லை என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இது குறித்து பா ம க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சில கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

"தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல். அதேநேரத்தில் தீண்டாமை குறித்த பொய்யான புகாரில் அப்பாவிகளை கைது செய்வது பெரும் பாவச்செயல், மாபெருங்குற்றம், மிருகத்தனமான நடவடிக்கை."

"வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி அளிக்கப்படும் புகார்கள் மீது விசாரணையின்றி கைது செய்ய அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யானைப்பாகனின் கைகளில் இருந்து அங்குசத்தைப் பிடுங்கும் செயல் ஆகும். உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ற ஆயுதத்துடன் அப்பாவிகள் வேட்டையாடப்படுவதற்கே இது வழி வகுக்கும்!"

"வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதும், பொய் வழக்குகள் பதிவு செய்யப் படுவதும் ஜாதி அமைப்பின் தவறு அல்ல... மனிதத்தின் தோல்வி என்றால் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டியது உச்சநீதிமன்றத்தின் கடமை அல்லவா? அவ்வாறு செய்யாதது உச்சநீதிமன்றத்தின் தோல்வி அல்லவா?", என உச்சநீதிமன்றத்தினை நோக்கி தன் கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Tweet about PCR Case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->