வாழ்க...வளர்க... லட்சணம் இதுதானா? டாக்டர் ராமதாஸின் அனல் பறக்கும் டுவிட்கள்!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான கட்டணம் ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

"தமிழ்நாட்டில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கான கட்டணம் ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம். ஒருவர் மருத்துவப் படிப்பை படித்து முடிக்க ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை செலவாகக்கூடும்! 

ரூ. 3 கோடி வரை செலவழித்து மருத்துவர் ஆகும் ஒருவர் ஏழைகளுக்கு சேவை செய்வார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?  அப்படியானால் கிராமப்புற ஏழைகளுக்கு மருத்துவ  சேவை எங்கிருந்து கிடைக்கும்? மருத்துவக்கல்வி வணிகமயமாவதை நீட் தடுக்கும் லட்சணம் இதுதானா?

அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் மருத்துவம் படித்தால் கிராமப்புறங்களில் கருணையுடன் பணியாற்றுவார்கள். ஆனால், அதற்கான  7.5 சதவீத இட ஒதுக்கீட்டையும் வழங்க மறுக்கிறார்கள். வாழ்க நீட்... வளர்க தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்!" என பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss tweet about hike of medical college fees


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->