ஒட்டுமொத்த இந்தியாவில் இந்த வகை மரங்கள் 10 மட்டுமே., மருத்துவர் இராமதாஸின் உணர்ச்சிபூர்வமான பதிவு.! - Seithipunal
Seithipunal


பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸின் முகநூல் பதிவு : திண்டிவனத்தையடுத்த ஒலக்கூரில் உள்ள கல்விக்கோயில்  வளாகத்தில் நான் பார்த்து பார்த்து வைத்து வளர்த்த மரம், செடி, கொடிகள் நீரூற்றப்படாமல் வாடிக் கொண்டிருப்பது குறித்தும்,  அதற்காக அவை என்னிடம் வருத்தத்தை வெளிப்படுத்தியது குறித்தும், கல்விக்கோயில் வளாக பராமரிப்பாளர்களை அழைத்து நீரூற்றும்படி கூறி கடிந்து கொண்டது குறித்தும்  நேற்றைய முகநூல் பதிவில் குறிப்ப்பிட்டிருந்தேன். 

கல்விக்கோயில் வளாக தாவரங்கள் பராமரிக்கப்பட்டுள்ளனவா? என்பதை அறிவதற்காக இன்று மாலை மீண்டும் அங்கு சென்றேன். அனைத்துச் செடிகளுக்கும், கொடிகளுக்கும் மரங்களுக்கும் தண்ணீர் ஊற்றப்பட்டிருந்தது. அதற்காக தாவரங்கள் எனக்கு நன்றி தெரிவித்தன. 
நேற்றைய நிலையை எண்ணி அயர்ச்சி அடைந்த நான் இன்றைய நிலையை எண்ணி மகிழ்ச்சியடைந்தேன்.

கல்விக்கோயில் வளாகத்தில்  சரசுவதி சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவிகளும்,  ஆசிரியர் பெருமக்களும் என்னை சந்தித்து படம் எடுத்துக் கொண்டனர். இந்த படத்தின் பின்னணியில் தெரியும் மரம் மிகவும் அரிதானது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் இந்த வகை மரங்கள்  ஏறக்குறைய 10 மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Rare tree in dindivanam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->