அந்த கதிர்வீச்சு தென் தமிழகத்தை அழித்து விடும்.! மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


கூடங்குளம் அணுமின்நிலையக் கழிவுகளை அங்கேயே சேமிப்பது தென் தமிழகத்தை அழித்து விடும் என்று, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் மூன்று மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் அணுக்கழிவுகள் அங்கேயே சேமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இது ஆபத்து!

அணுக்கழிவுகளை பாதுகாப்பதற்கான பாதாள கட்டமைப்பு  வேறு இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் இது.  முதல் இரு அணு உலைகளின் கழிவுகளும் அந்த வளாகத்தில் தான் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

அணுக்கழிவுகளில் இருந்து கதிர்வீச்சு  ஏற்பட்டால் ஒட்டுமொத்த தென் தமிழக மக்களும் பாதிக்கப்படுவார்கள்.  எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிட்டு தமிழ்நாட்டுக்கு வெளியில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அணுக்கழிவு சேமிப்பு பாதாள மையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்!" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss say about koodankulam sep


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->