20 ரூபா டோக்கன் கேள்விபட்டிருக்கேன். இது என்ன புதுசா வவுச்சர்., போட்டு தாக்கிய மருத்துவர் இராமதாஸ்.! நாளை வெளியாகும் முடிவாகும்.! - Seithipunal
Seithipunal


நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், தனது முகநூல் பக்கத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி ஒரு நிதர்சன கதை ஒன்றை தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்தும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரத்தை பாட்டிகளை தெளிவாக எடுத்துரைத்துள்ள மருத்துவர் இராமதாஸ் அவர்களின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அவரின் அந்த பதிவில்,

"நோட்டு மேல நோட்டு வந்து கொட்டுகிற நேரமிது!

சீதா பாட்டி:  என்னடி ராதா... நாலு நாளா ஆளையே காணோம். நீ வேலை செய்யுற பக்கத்து வீட்டு மாமி உன்னக் காணோம், காணோம்னு என்னைப் போட்டு பாடாய் படுத்தி எடுக்குறா... எங்கடி போன?

ராதா பாட்டி:  சொந்த ஊருக்குத் தான்க்கா போயிருந்தேன்.

சீதா பாட்டி:  அப்படியா... நல்லதுடி. அது சரி. வழக்கமா நீ ஊருக்கு போயிட்டு வந்தா உன்  முகம்  வாடிப் போயிருக்கும். ஆனால், இப்போது பிரகாசமாகத் தெரியுதேடி. என்னடி விசேஷம்?

ராதா பாட்டி:  உள்ளாச்சித் தேர்தல்ல நிக்கிறவங்க மொத்தமா கொடுத்தத வாங்குனதுனாலத் தான் அக்கா இவ்ளோ சந்தோஷம்.

 

சீதா பாட்டி:  ஓ.... ரொம்ப வெயிட்டான கவனிப்போடி. என்ன முன்னூறா... நானூறா?

ராதா பாட்டி:  அடப்போக்கா. நீ ஒண்ணும் அறியாத மண்ணுக்கா. உனக்கு ஒலக விஷயம் தெரியிறது போல உள்ளூர் விஷயம் தெரியிறது இல்லக்கா. அதுல நீ இன்னும் கொஞ்சம் உஷாரா மாறுணும் அக்கா.

சீதா பாட்டி:  என்னடி சொல்ற?

ராதா பாட்டி:  ஆமாம்க்கா... நீ சொல்றா மாறி 300, 500 கொடுக்க இது என்ன அசம்பிளி எலக்சனா. கவுன்சிலர் எலக்சனுக்கா. எல்லா ஊர்லயும், எல்லா கட்சிக்காரணும் கொண்டாந்து கொட்டீட்டான்க்கா... கொட்டீட்டான். அது புரியாம நீ பேசுற.

சீதா பாட்டி:  கொஞ்சம் வௌக்கமா சொல்லேன்டி.

ராதா பாட்டி:  சொல்றன்க்கா... எங்க ஊருல மேயர் எலக்சன் நடக்குது. கவுன்சிலர் பதவிக்கு நிக்கிற ஒரு கட்சிக்காரன் பட்டுப்புடவை கொடுத்தான். இன்னொரு கட்சிக்காரன் கொலுசும், மூக்குத்தியும் கொடுத்தான். இவனுங்கள மிஞ்சிறது மாறி இன்னொருத்தன் பிரிஜ்ஜி கொடுத்தான்க்கா. அதனால் ஊரெல்லாம் ஒரே கொண்டாட்டம் தான்க்கா.

சீதா பாட்டி:  ஒருத்தரும் பணம் தரலயாடி?

ராதா பாட்டி:  குறுக்க குறுக்க பேசாதக்கா. நாந்தான் ஒரு புளோல போயிகிட்டு இருக்கேன்ல. நீ குறுக்க பூந்தா எப்படி. நெறையா ஊருல பணம் கொட்டுனுதாம்க்கா. எனக்கு தெரிஞ்ச ஒரு வார்டுல ஒரு கட்சி ரூ.10 ஆயிரமாம். இன்னொரு கட்சி ரூ.5 ஆயிரமாம். மற்றொரு கட்சி ரூ.2 ஆயிரமாம். ஒரு சுயேட்ச ஆயிரமாம். ஒரு ஓட்டுக்கு மட்டும் ரூ.18 ஆயிரமாம். ஒரு குடும்பத்துல 5 ஓட்டு இருந்தா ரூ.90 ஆயிரமாம்க்கா.

சீதா பாட்டி:  என்னடி சொல்ற. கேக்கற எனக்கு மயக்கமே வருதடி. 

ராதா பாட்டி:  இருக்கா... இருக்கா... இன்னும் நான் சொல்றதையும் கேட்டுக்கிட்டு மொத்தமா மயக்கம்போட்டு விழுக்கா. ஒரு ஓட்டுக்கு ரூ.18 ஆயிரம்தான் பணமா கொடுத்ததுல அதிகபட்சம்கா. ஆனா இன்னும் சில ஊர்ல பணத்தோட சேர்த்து வவுச்சரும் குடுத்திருக்காங்ககா.

சீதா பாட்டி:  அது என்னடி வவுச்சரு? நான் இருபது ரூபா டோக்கன்தான் கேள்விபட்டிருக்கேன். இது என்னடி புது கதையா இருக்குது வவுச்சர்னு. அத பணமா மாத்துலாமா? இல்ல நம்மல ஏமாத்திருவாங்கலா? 

ராதா பாட்டி:  அது போகப் போகதான்க்கா தெரியும். அது ஒரு மாநகராட்சிக்கா. அங்க  ஒரு கட்சி சார்புல ரூ.2 ஆயிரம் குடுத்தாங்க. அதைப்பார்த்த இன்னொரு கட்சி ரூ.3 ஆயிரம் குடுத்தாங்ககா. அப்புறம் முதல் கட்சி எக்ஸ்ராவா ரூ.4 ஆயிரம் குடுத்தாங்க. அடுத்த கட்சி அவுங்க சார்புல எக்ஸ்ராவா ரூ.5 ஆயிரம் குடுத்தாங்கக்கா. 
அத முறியடிக்க முதல் கட்சி வெள்ளிக் கொலுசு கொடுத்ததுக்கா. அடுத்தக்கட்சி வெள்ளிக்காசு அள்ளி உட்டுதுக்கா. அப்பறமும் போட்டி நிக்கல அக்கா. 

முதல்கட்சி சார்புல ரூ.10 ஆயிரத்துக்கு வவுச்சர் கொடுத்தாங்க. அடுத்தக்கட்சி சார்புல ரூ.20 ஆயிரத்துக்கு வவுச்சர் கொடுத்தாங்கக்கா. மொத்தமா ஒரு ஓட்டுக்கு ரூ.14 ஆயிரம் பணம், வெள்ளி கொலுசு, வெள்ளி காசு, ரூ.30 ஆயிரம் வவுச்சர் என மொத்தமா ரூ.50 ஆயிரத்துக்கு மேல தேறியதுக்கா. அதனால, உள்ளாட்சித் தேர்தல்ல மக்கள் மகிழ்ச்சியா இருக்காங்கக்கா. 

 

சீதா பாட்டி:  என்னடி இது அணியாயம்-? இப்பிடி இருந்தா ஜனநாயகம் எங்கேயிருந்துடி விளங்கும்? அது சரி, நீ ஒரு கட்சிக்கு ஓட்டுப்போடுவியே மாம்பழம் கட்சி, அவங்க என்ன குடுத்தாங்க?  

ராதா பாட்டி:  குடுத்தாங்க... குடுத்தாங்க... வாக்குறுதி குடுத்தாங்க. அரசியல் சட்டத்துல 12வது அட்டவணைல உள்ள நகர்ப்புற உள்ளாட்சிக்கான 18 அதிகாரங்களையும் செயல்படுத்தி, மக்களுக்கு நன்மை செய்றதா வாக்குறுதி குடுத்தாங்கக்கா. நானும் அவங்களுக்கே ஓட்டுப்போட்டேன்க்கா.

சீதா பாட்டி:  ஒரு கட்சி 18 அதிகாரத்த பயன்படுத்துறேங்குது. மத்த கட்சியெல்லாம் ரூ.18 ஆயிரம் பணம் குடுக்குது. ஜனநாயகம் ஜெயிக்குதா... பண நாயகம் ஜெயிக்குதா...? நாளைக்கு பாப்போம்டி."

இவ்வாறு அவரின் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss Say About Election 2022 Story


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->