பஞ்சமி நிலம் தொடர்பாக திமுகவுக்கு நோட்டீஸ் அனுப்பினார் மரு.ராமதாஸ்.! மன்னிப்பு கோர வேண்டும், இல்லாவிட்டால், இது தான் நடக்கும்.! - Seithipunal
Seithipunal


அசுரன் படத்தினை பார்த்த ஸ்டாலின் தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் பஞ்சமி இடத்தில்தான் இருக்கிறது என ஒரு ட்வீட் போட அது தீயாக பரவியது. 

, திமுக தலைவர் மு க ஸ்டாலின் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு அதிமுகவும், பாஜகவும் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் தான் இருக்கிறது. உரிய நேரத்தில் ஆவணங்களை வெளியிடுவதாக தெரிவித்தனர். 

இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் அளித்தார். 

இதையடுத்து, முரசொலி அலுவலகம் விவகாரம் தொடர்பான புகாரில், உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பிது. இதையடுத்து, உதயநிதி தேசிய பட்டியலின ஆணையத்திடம் ஆஜராகாமல். அவருக்கு பதிலாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆஜராகினார். அத பின் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, பாமக நிறுவனர் ராமதாசுக்கு 1000 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அவை யார், யார் பெயரில் உள்ளன என்பது  அவர் மீது முரசொலி விவகாரத்தில் அவதூறு வழக்குப் பதிவு செய்யப்படும் போது தெரியும் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார்.

இந்தநிலையில், உண்மைக்கு புறம்பான, அடிப்படை ஆதாரமற்ற, அவதூறான குற்றச்சாட்டை முன்வைத்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும், இல்லாவிட்டால் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்து பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அவர் சார்பில் அவரது வழக்கறிஞர் கே.பாலு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dr ramadoss notice to dmk rs.bharati


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->