பிரசாந்த் கிஷோரிடம் மண்டியிட்ட மு.க ஸ்டாலின்... மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அனல்பறக்க பேச்சு.!  - Seithipunal
Seithipunal


மு.க ஸ்டாலின் சொந்தக்காட்சிக்காரர்களை நம்பாமல் பிரசாந்த் கிஷோரிடம் மண்டியிட்டு இருக்கிறார் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விமர்சித்தார்.

பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்து எடப்பாடி தொகுதி ஜலகண்டாபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உரையாற்றினார். 

இந்த பிரச்சாரத்தில் பேசுகையில், " மு.க ஸ்டாலின் சொந்தக்காட்சிக்காரர்களை நம்பாமல், பிரசாந்த் கிஷோர் என்பவரை நம்பியுள்ளார். பிரசாந்த் கிஷோரிடம் மண்டியிட்டு மு.க ஸ்டாலின் இருக்கிறார். பிரசாந்த் கிஷோர் தான் திமுக கட்சிக்காரர்களை நிர்ணயம் செய்கிறார். திமுக கட்சிக்காரர்கள் கூட நமக்கு வாக்களிக்க தயராகிவிட்டார்கள். காரணம் விவசாயி மீண்டும் வெற்றியடைய வேண்டும் என்ற ஒரே காரணம். 

மு.க ஸ்டாலின் என்றாலே வெற்று அறிவிப்பு. மு.க ஸ்டாலினை நம்பி பல பெண்கள் நகைகளை அடகு வைத்தனர். அவர்களுக்கு நோட்டிஸ் மட்டுமே இன்று வரை வருகிறது. நமது தமிழக முதல்வர் விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார். 6 பவுன் வரையிலான நகைக்கடனை தள்ளுபடி செய்துள்ளார். மாதம் ரூ.1500 வழங்கவுள்ளார். வருடத்திற்கு 6 சிலிண்டர் இலவசம் என்று அறிவித்துள்ளார். 

கொரோனா காலத்தில் இவைகள் வரவேற்கப்படவேண்டிய திட்டங்கள் ஆகும். இவை அத்தியாவசியம். இதனாலேயே நமது கூட்டணிக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது. தமிழகத்தில் மு.க ஸ்டாலின் இல்லையென்றால் அவர் பூஜ்யம் தான். சில ஊடகம் அவரை தூக்கி வைத்திருக்கிறது. மு.க ஸ்டாலின் ஒன்றுமே கிடையாது. இதையெல்லாம் மக்கள் சிந்திக்க வேண்டும். சேலம் மாவட்டம் எனக்கு பிடித்த மாவட்டம். 

இந்த மாவட்டத்தில் நமது கோரிக்கையான மேட்டூர் உபரிநீர் திட்டம் முதற்கட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேட்டூர் உபரி நீர் கோரிக்கை தொடர்பாக பல போராட்டங்கள் நாம் முன்னெடுத்துள்ளோம். தமிழக முதல்வர் இதன் முதற்கட்டதை நிரைவேற்றியுள்ளார். மருத்துவர் இராமதாஸின் கோரிக்கைகள் பலவும் தமிழக முதல்வரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தமிழக முதல்வராக மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தான் வருவார். அது நிச்சயம் நடக்கும். நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Talks about MK Stalin and Prashant Kishor TN Election 2021 Salem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->