மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வழங்க வேண்டும் - டாக்டர் அன்புமணி இராமதாஸ் எம்.பி.,!  - Seithipunal
Seithipunal


தொடர்வண்டிகளில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை வழங்க வேண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவில் அனைத்து தொடர்வண்டிகளும் கொரோனா பரவலுக்கு முந்தைய கால அட்டவணைப்படி இயங்கத் தொடங்கி விட்டன. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது!

மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை வசதி படைத்தவர்கள் பயன்படுத்துவதில்லை. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்தக் கட்டண சலுகை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் கட்டண சலுகையை நிறுத்தி வைப்பது நியாயமல்ல!

மூத்த குடிமக்களுக்கு வருவாய் ஆதாரம் இல்லை. அவர்களில் பலர் கட்டண சலுகைக்காகவே தொடர்வண்டியில் பயணிக்கிறார்கள். இவற்றைக் கருத்தில் கொண்டு மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும்  வழங்க தொடர்வண்டி வாரியம் முன்வர வேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say train fee concessions for senior citizens


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->