நீங்க யாரை சொல்லுறீங்க? கேள்வி எழுப்பிய செய்தியாளர்! இவர்கள் தான்., லிஸ்ட் போட்ட அன்புமணி இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திற்கு ஆதரவாக கடலூர் மாவட்ட நிர்வாகம், அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் செயல்படுவதாக, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இன்று நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து, பாமக சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி இராமதாஸ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, 

"என்எல்சி நிறுவனத்திற்கு கடந்த 66 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கொடுத்தவர்களுக்கு இன்று வரை வேலை இல்லை. இன்று வரை அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடையாது. இப்போது கூடுதலாக 25,000 ஏக்கர் நிலத்தை எடுக்கப் போவதாக என்எல்சி நிறுவனம் அறிவித்திருக்கிறது. 

இதற்கு முன்பு 37 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த நிறுவனம் எடுத்துள்ளது. அந்த நிலத்தில் இருக்கின்ற பழுப்பு நிலக்கரியை இன்னும் 15, 20 ஆண்டுகள் எடுக்கலாம். ஆனால் இன்னும் கூடுதலாக 25,000 ஏக்கர் நிலத்தை எடுக்க வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து என்எல்சி நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு அதற்கு ஒத்துழைத்துக் கொண்டிருக்கிறது. இது அநியாயம்.

என்எல்சி நிர்வாகத்தில்  சமீபத்தில் 299 பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். அதில் ஒருவர் கூட தமிழ்நாட்டை சார்ந்தவர் கிடையாது. தமிழர்களுக்கு வேலை தராத இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் எதற்கு இருக்க வேண்டும்? 

சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்திற்கும், மக்களின் வாழ்வாதாரத்துக்கும் எதிராக, மண்ணின் மைந்தர்களை புறக்கணித்து வருகின்ற வளர்ச்சி தேவையில்லை. அது எந்த திட்டமாக இருந்தாலும் சரி, அது எட்டு வழி சாலையாக இருந்தாலும் சரி, புதிய விமான நிலையமாக இருந்தாலும் சரி, விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் அழித்து வளர்ச்சி என்பது எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு நீடித்த வளர்ச்சி தான் தேவை" என்று தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள் என்எல்சிக்கு ஆதரவாக செயப்படுகிறவர்கள் யார்? என்று கேள்வி எழுப்பினர். அதற்க்கு பதிலளித்த அன்புமணி இராமதாஸ், "இந்த மாவட்ட நிர்வாகம், அரசை சார்ந்தவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தான் குறிப்பிடுகிறேன்.

இவர்கள் தமிழக மக்களின் உரிமைகளை பெற்றுத்தர சண்டையிட வேண்டும். ஆனால் ஏன் செய்யவில்லை. தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளிக்கிறார்கள் 'நிலம் எடுக்க விடமாட்டோம்' என்று, தேர்தலுக்கு பிறகு 'நிலம் எடுத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்கிறார்கள். என்ன காரணம் என்று அவர்களைத் தான் கேட்க வேண்டும். 

இதை நாங்கள் விடுவதாக இல்லை. இந்த விவகாரத்தை நாங்கள் சட்டரீதியாகவும் சந்திக்க இருக்கிறோம். அரசியல் ரீதியாகவும் போராட்டம் செய்ய உள்ளோம். மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் அடுத்தடுத்து போராட்டத்தை நடத்த இருக்கிறோம்" என்று அன்புமணி இராமதாஸ் பதிலளித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About NLC Supporters


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->