பாமகவின் வலியுறுத்தல் எதிரொலி : பின்வாங்கிய இலங்கை அரசாங்கம்.! - Seithipunal
Seithipunal


“சீன உளவு கப்பல் வருகைக்கு இலங்கை தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது” என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இந்திய வெளியுறவுத்துறை கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக சீனாவின் யுவான் வாங் - 5 உளவுக்கப்பல் அம்பான்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு இலங்கை அரசு தடை விதித்திருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கோணத்தில் இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.

சீன உளவுக்கப்பலை இலங்கை துறைமுகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என இலங்கை அரசை எச்சரிக்கும்படி மத்திய அரசை பாமக வலியுறுத்தியிருந்தது. அதன்படி சீனக்கப்பலின் வருகை தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

1987ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி இந்திய ஒற்றுமை மற்றும் பாதுகாப்புக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை மண் பயன்படுத்தக்கூடாது. அந்த ஒப்பந்தத்தை இலங்கை மதித்து நடப்பதை மத்திய அரசு உறுதிசெய்யவேணடும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About China Ship in sri lanka issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->