ஓபிஎஸ்-இபிஎஸ் விவகாரம், பாஜக-அண்ணாமலை குறித்து அன்புமணி இராமதாஸ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


நாகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ், செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதில், ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களின் கருத்து என்ன? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, 'அது அவர்களுடைய உள்காட்சி விவகாரம். மற்ற கட்சிகளின் உள்விவகாரங்களில் பேசுவது நாகரிகம் அல்ல' என்றார்.

தொடர்ந்து பேசிய அன்புமணி இராமதாஸ், "ராகுல் காந்தியின் பாதயாத்திரை மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. நிச்சயம் ஒரு தாக்கம் இருக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது என்று அண்ணாமலை கூறுவது, அவர்களின் அரசியல் வளர்ச்சிக்காக பேசுவது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் அப்படி பேசுவது வழக்கம்தான். 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க கோரி நாங்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தியுள்ளோம். குறிப்பாக என்எல்சி விவகாரத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி உள்ளோம். இந்த போராட்டத்தை பொருத்தவரை அந்த கடலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு திமுக அமைச்சர்களும் என்எல்சி நிர்வாகத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் தேர்தலுக்கு முன்பு என்எல்சியை எதிர்த்து போராட்டம் செய்தார்கள். தற்போது ஆளுங்கட்சியாக வந்ததும் என்எல்சி நிர்வாகத்துக்கு சாதகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். இந்த நிர்வாகம் மக்களையும், சுற்றுச்சூழலையும் நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது.

விவசாயத்தை அழித்துவிட்டு, அந்த மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்குவதில்லை. இப்படிப்பட்ட ஒரு நாசக்கார என்எல்சி நிர்வாகத்திற்கு அதே மாவட்டத்தை சேர்ந்த இரண்டு திமுக அமைச்சர்கள் ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சாலைகள் மட்டுமல்ல, இந்த ஒட்டுமொத்தமாக டெல்டா மாவட்டம் முழுவதுமே ஒரு சாலைகள் கூட சரியாக இல்லை. குறைந்தபட்சம் செப்பனிடும் பணியாவது மேற்கொள்ளலாம். அது கூட இங்கு நடைபெறவில்லை.

பல ஆண்டு காலமாக கிழக்கு கடற்கரைச் சாலையை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் எவ்வளவு நாள் தான் போட போகிறார்கள்? எப்போது முடிக்கப் போகிறார்கள் என்றே தெரியவில்லை. ஒரு சாலையும் சரியில்லை" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About ADMK DMK and BJP Tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->