ஆவின் பச்சை, ஆரஞ்சு விவகாரம் | தவிக்கும் மக்கள் - ஆப்ஷன் கொடுக்கும் அன்புமணி இராமதாஸ் எம்.பி.,!  - Seithipunal
Seithipunal


ஆவின் பச்சை உறை  பால்  தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் அல்லது ஆரஞ்சு உறை பாலின்  விலையை குறைக்க வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பச்சை உறை பாலுக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதனால் லிட்டருக்கு ரூ.16 கூடுதலாக கொடுத்து ஒரு லிட்டர் ரூ.60 என்ற விலைக்கு ஆரஞ்சு உறை பாலை வாங்கும் நிலைக்கு ஆவின் வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பச்சை உறை பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு  முதன்மை காரணம் ஆரஞ்சு உறை பால் விலை உயர்த்தப்பட்டது தான்.  ஆரஞ்சு பால் விலை லிட்டர் ரூ.48-லிருந்து ரூ.60 ஆக உயர்த்தப்பட்டதால் அதன் தேவை குறைந்து விட்டது. குறைந்த விலையில் கிடைக்கும்  பச்சை உறை பால் தேவை அதிகரித்திருக்கிறது.

பச்சை உறை பாலுக்கான தேவை அதிகரித்திருப்பது ஆவின் நிர்வாகத்திற்கு தெரியும். பச்சை உறை பாலை பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப தட்டுப்பாடின்றி ஆவின்  வினியோகித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியதால் ஒருபுறம் மக்களுக்கு பாதிப்பு; மறுபுறம் தனியார் நிறுவனங்களுக்கு லாபம்.

வாடிக்கையாளர்களை ஆவின் ஏமாற்றக்கூடாது. பச்சை உறை பால் வினியோகத்தை குறைந்தது 20% அதிகரிக்க வேண்டும். அதில் ஏதேனும் தடை இருந்தால்  ஆரஞ்சு உறை பாலின் விலையை முன்பிருந்தவாறே லிட்டர் ரூ.48 என்ற அளவுக்கு குறைக்க ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும்" என்று, அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say about Aavin milk issue Tamilnadu 2022


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->