ஊரக வேலைஉறுதித் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி.,! - Seithipunal
Seithipunal


ஊரக வேலைஉறுதித் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும், பாமகவின் இளைஞரணி தலைவருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.10,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. 

ஆனால்,  ஏற்கனவே இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.70,000 கோடியை விட  ரூ.19,888 கோடி அதிகமாக செலவழிக்கப்பட்டிருப்பதால் கூடுதல் ஒதுக்கீடும் போதுமானதல்ல.

ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான தேவைகளை ஆய்வு செய்து இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைப் பயன்படுத்தி வரும் மார்ச் மாதம் வரை தமிழகத்திற்கான நிதி  தேவையை கணக்கிட்டு மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு பெற வேண்டும்!.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கூடுதல் பணிநாட்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளன. அவற்றை மத்திய அரசு ஆய்வு செய்து அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள துணை நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்க முன்வர வேண்டும்." என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss MP Say About 100 Days Work Issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->